கிண்ணியாவில் டெங்குவினால் இருவர் வபாத்: இதுவரை எட்டுப்பேரை மரணம்

(அப்துல்சலாம் யாசீம்,  ஹஸ்பர் ஏ ஹலீம் 
கிண்ணியா)

கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினால் இன்று (12) அதிகாலை இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கிண்ணியா.மாஞ்சோலைச்சேனை பகுதியைச்சேர்ந்த எஸ்.ஏ.றிஸ்வானா (33வயது) மற்றும் கிண்ணியா.மக்கள் வங்கி வீதியைச்சேர்ந்த பாத்திமா சனா (06வயது) எனவும் தெரியவருகின்றது.

கிண்ணியா பிரதேசத்தில் 1150 பேர் இதுவரைக்கும் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிண்ணியா சுகாதார சேவைகள் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments