பசிலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
சட்டமா அதிபர் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மல்வானை பிரதேசத்தில் உள்ள 16 ஏக்கர் நிலம் மற்றும் வீடு சம்பந்தமான வழக்கு தொடர்பில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான பணத்தை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் முறைப்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment