இன்னும் என்னை விசாரிக்காதது ஏன்?''


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பத­வி­யி­லி­ருந்து என்னை இடை நிறுத்தம் செய்து சில மாதங்கள் கடந்­து­விட்­ட­போதும் என் மீது ஒழுக்­காற்று விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை. அது ஏனென்று தெரி­ய­வில்லை.

என் மீது தவ­றுகள் இருந்தால் விசா­ரணை நடத்­தி­யி­ருக்க வேண்டும்' என முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சா­ள­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பத­வி­யி­லி­ருந்து இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தா­வூத்­திடம் அவ­ரது அர­சியல் எதிர்­காலம் தொடர்பில் வின­வி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கையில்;

'எதிர்­கா­லத்தில் நான் பிர­நி­தித்­துவ அர­சியல் செய்­வ­தில்லை என்று தீர்­மா­னித்­தி­ருக்­கிறேன். தேர்­தல்­களில் போட்­டி­யி­டாது கருத்து உரு­வாக்­கி­யாக்­கி­யாக செயற்­ப­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளேன்.

எனது கடந்த கால அர­சியல் வாழ்க்­கையில் நான் விட்ட பிழைகள் ஊடா­கவும், நான் செய்த சரி­யா­ன­வைகள் ஊடா­கவும் நான் பெற்ற அனு­ப­வங்­களை ஏனை­யோ­ருடன் பகிர்ந்து கொள்ளத் தீர்­மா­னித்­துள்ளேன்.

புதிய அர­சியல் மாற்­றங்­க­ளுக்­காக முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்ளேன். கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் எனது அனு­ப­வங்­களைப் பகிர்ந்து புதிய கருத்து உரு­வாக்­கி­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறேன்.

தற்­போ­தைக்கு முஸ்லிம் அர­சியல் கட்­சிகள், அமைப்­பு­க­ளு­டனே கலந்­து­ரை­யா­டல்­களை செய்து வரு­கிறேன். தேவை­யேற்­படும் போது ஏனைய பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்வேன்.

என் மீது விசாரணை நடத்துவதற்கு எப்போது அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரியவில்லை. என்றாலும் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்' என்றார்.

Comments