கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம்: உயர் வலு மின் கம்பிகள் அகற்றல்
(ihzana fareed)
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாடிக் கட்டடத்திற்கு அருகாமையில் இருந்த உயர் வலு மின் கம்பிகளை அகற்றும் பணி இலங்கை மின்சார சபையினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் இந்த மாடிக்கட்டடத்தில் புனரமைப்பு வேலை செய்த இரு பிள்ளைகளின் தந்தையான எம்.ஏ.சஹாப்தீன் மின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் மரணமானார்.
இவரது மரண விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு சென்ற திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மின்சார சபை அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காதிருப்பதட்கான முன்னேற்பாடுகளை செய்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார்.
இந்த அடிப்படையில் தற்போது இந்த மின் கம்பிகளை அகற்றும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது





Comments
Post a Comment