சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டுகள் மற்றும் டிக்கட்டுகளை வைத்திருந்தவர் கைது

(ihzana fareed)

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இரண்டு கடவுச் சீட்டுகளையும், வெளிநாடு செல்லுவதற்கான இரண்டு டிக்கட்டுகளையும் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) உத்தரவிட்டார்.

புத்தளம்,கொத்தான்தீவு,சமீரகம,பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலை,குச்சவெளி, நிலாவெளிப் பிரதேசங்களில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பெண்களிடம் கடவுச் சீட்டுகள் மற்றும் தகவல்களையும் சேகாரித்து வந்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை சனிக்கிழமை (4) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (5) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments