பாம்புகளை பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல் உங்களுக்காக!


மனிதனுக்கும் சில உயிரிகளுக்கும் இனம்புரியாத நெருக்கமுண்டு.

இந்த நெருக்கம் இருவழிகளில் உண்டாகும். மனிதனோடு நெருங்கிப் பழகி, நன்மை செய்து, மனதுக்கு மகிழ்வைக் கொடுத்து, அன்பைப் பொழியும் பாசத்தின் வழியிலானது ஒருவகை தொடர்பு. மற்றைய வழி இதற்கு எதிர்மாறானது . அது பாசத்தால் ஏற்படுவதல்ல, மாறாக பயத்தால் எற்படுவது.

அப்படி பயத்தால் ஏற்படும் தொடர்புக்கு மிக நல்ல உதாரணம் பாம்புகள். என்னதான் பாம்புகளை வெறுத்தாலும் பாம்புகளைப் பற்றிய கதைகளை உருவாக்குவதிலும், படங்களை எடுப்பதிலும், அவை பற்றிய தகவல்களை அறிவதிலும் தொன்றுதொட்டே மனிதர்கள் ஆர்வம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அப்படிப் பட்ட பாம்புப் பிரியர்களுக்காக பாம்புகள் பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை இங்கு தருகிறோம்.

காற்றைக் குடிக்கும் பாம்பு

சில பாம்புகள் இரண்டு வருடங்கள்வரை உணவில்லாமல் உயிர்வாழுமாம், காற்றைத் தின்று உயிர் வாழும் பாம்பு எனசொல்கிறார்களே அவ்வகை பாம்புதான் இது! இது அடிக்கடி வாயைத் திறந்து காற்றில் உள்ள சத்துக்களை பிரித்தெடுத்து அதனையே தனது வாழ்நாளுக்கு தேவையான சக்தியாகப் பயன்படுத்துகின்றது. இதேவேளை பிரேசிலில் உள்ள ஒரு தீவிற்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்திருக்கிறார்கள். அங்கே ஒரு சதுரமீட்டருக்கு 5 பாம்புகள் வீதம் உள்ளனவாம். அங்கு சென்று பாம்புக் கடி வாங்காமல் எவரும் திரும்ப முடியாதென்பதால் தான் அங்கு செல்ல தடை. உலகம் முழுவதும், ஒரு வருடத்திற்கு பாம்பு கடி த்து, 1 லட்சம் மக்கள் வரை இறக்கிறார்கள் என்பது ஒரு உபரித் தகவல்.அமெரிக்கர்களில் 51 சதவீதமானவர்கள் பாம்புக்குத்தான் அதிகமாக பயப்படுகிறார்கள்.

இரு தலைப் பாம்பு இருக்கிறது

வழக்கமாக பாம்புகளுக்கு ஒரு தலை தான் இருக்கும். ஆனால் இந்து சமயப் புராணங்களில் ஐந்து தலை கொண்ட பாம்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. ஆனால் அவை உண்மையில் இருக்கின்றனவா இல்லையா என்பது தெரியவில்லை. என்றாலும் இரண்டு தலை உள்ள சில பாம்புகள் இருக்கின்றன. அவை உணவிற்காக தங்களை தாங்களே அடித்துக் கொள்ளுமாம். உலகில் அதிபயங்கரமான பாம்புகள் என வரை யறுக்கப்பட்ட முதல் 10 கொடிய பாம்புகள் அவுஸ்திரேலியாவில் தான் இருக்கின்றன.பாம்புகள் தங்கள் வாய்களை 150 டிகிரிவரை அகலமாக விரித்து க்கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

மகுடிக்கு ஆடுமா? அசையுமா?

‘ரைட்டனோபா’ எனும் பாம்பு 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, அழிந்த இனம் ஆகும். உலகில் நீள மான, பெரிய, எடைகூடிய பாம்பு இதுதான் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மகுடி வாசிக்க பாம்பு நடனம் ஆடுகிறதே.. அது மகுடியின் சத்தத்திற்கு அல்ல . உண்மையில் அதனசைவிற்குத் தான் பாம்புகள் அசைவதை நாம் நடனமாடுவதாக எண்ணுகிறோம். ஏனெனில் பாம்பிற்கு காதுகள் இல்லை என்பதால் மகுடிச் சத்ததை கேட்க முடியாது. ‘ கடல் மூக்கு பாம்பு’ என அழைக்கப்படும் ஒரு வகை பாம்பு உள்ளது. அதன் ஒருதுளி விஷம் 3 பேரை ஒரே தடவையில் கொல்லும் அளவிற்கு வீரியமானது.

உறங்குவதைக் கண்டுபிடிக்க முடியாது

பாம்புகளுக்கு நன்கு விரியக்கூடிய நெகிழ்வான தாடைகள் இயற்கையாக அமைந்துள்ளன. பாம்பு தன் தலையை விட பெரிய இரையை லாவகமாக விழுங்குவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.பாம்புகளுக்கு கண் இருந்தாலும், இமைகள் இல்லை. அதனால் அவை உறங்கும் போதும் கண்கள் திறந்தே இருக்கும். இதனால் பாம்பு விழிப்பாக இருக்கிறதா, உறங்குகிறதா என்று அதன் அசைவை வைத்தே கண்டுபிடிக்க முடியும். பாம்புகள் வாசத்தை உணர்வதற்கு தங்கள் நாக்குகளை பயன்படுத்துகின்றன.

Comments