இராணுவத்தைக் ‘காட்டிக்’ கொடுத்தது மஹிந்ததான்: சஜித்!


யுத்தம் நிறைவடைந்து இரு வாரங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபையுடன் சர்வதேச விசாரணைகளுக்கு இணக்கம் தெரிவித்து ஒப்பந்தம் செய்து கொண்டது மஹிந்த ராஜபக்சவே தவிர பிரதமர் ரணிலோ ஜனாதிபதி மைத்ரியோ இல்லையென தெரிவித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாச.

அப்போது இலங்கை வந்திருந்த ஐ.நா பொதுச் செயலாளருடன் யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிவிசாரணைக்கு இணக்கம் தெரிவித்து அப்போதே ஒப்பந்தத்துக்கு இணங்கிய மஹிந்ததான் இப்போது அதற்கெதிராகப் பேசுவதாகவும் சஜித் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments