பலவந்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமல்!


வெலிகடை சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலம் பாதிப்படைந்தன் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் சட்டமூலத்திற்கு அமைவாக எந்தவொரு சிறைக்கைதியாவது உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்தால் அவரை பலவந்தமாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments