எனக்கு முதுகெலும்பு உள்ளதென்பதனை  காட்டிவிட்டேன்!


வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, தான் அதனை நிராகரித்து விட்டதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழைப்பை நிராகரித்து, அனைத்துலக சமூகத்துக்கு தனது முதுகெலும்பைக் காட்டி விட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில்,  மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, நான், அதனை நிராகரித்து, வெளிநாட்டு நீதிபதிகளை இங்கு கொண்டுவருவதற்கு நான் தயாராக இல்லை என்று கூறினேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments