பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்திய மருத்துவர்!


வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் அந்த வைத்தியசாலையின் கணக்கியல் பிரிவின் பெண்கள் கழிவறைக்குள் பாதுகாப்பு கெமரா பொருத்திய சம்பவம் ஒன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

இது  தொடர்பாக நடத்திய விசாரணைகளின் மேற்கோள்களை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரான மருத்துவருக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக மேற்கோள்களை அனுப்புமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் வழக்கு விவகார நடவடிக்கை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் சந்தேக நபரான மருத்துவரை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தல் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் கைப்பற்றிய பாதுகாப்பு கெமராவில் பதிவுகள் சம்பந்தமாக கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இயங்கும் அவசர பதில் நடவடிக்கை பிரிவின் அறிக்கையை பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Comments