ரணிலின் பிறந்த நாள்; மஹிந்த பிரார்த்தனை!


நேற்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் வைத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு இரங்கல் தெரிவித்த வேளையில் பிரதமரைத் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச தற்போதைய பிரதமர் ரணிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

புன்முறுவலுடன் அதனை ரணில் ஏற்றுக்கொண்டிருந்தமையும் ரணிலுக்கு சிறந்த பிறந்த நாள் அமையத் தான் பிரார்ததிருப்பதாக மஹிந்த தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments