NGOக்களின் விருப்பத்துக்கெல்லாம் இணங்க முடியாது: மைத்ரி


இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளையெல்லாம் அனுமதிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

தமது சர்வதேச உறவுகளைப் பேணிக்கொள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வைக்கும் விவகாரங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளவோ அவர்கள் விருப்பத்துக்கெல்லாம் இணங்கவோ அரசாங்கம் தயாரில்லையென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments