O/L பெறுபேறுகள் 28ம் திகதி வெளியிடப்படும்: அகில


2016ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 28ம் திகதியளவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

இதேவேளை இவ்வருடத்துக்கான பரீட்சை டிசம்பர் 12 முதல் 21 வரையான காலப்பகுதியிலும் இடம்பெறும் எனவும் இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 20ம் திகதியும், உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 2 வரையான காலப்பகுதியிலும் இடம்பெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments