இலங்கை மீனவர்களுக்கு டெப்(TAB) வழங்க நடவடிக்கை!



சர்வதேச கடற்பரப்பில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பில் துல்லியமான தரவுகளை பதிவு செய்வதற்காக தேவைப்படும் பயிற்சியை இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்றொழில் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் போது அது தொடர்பான தரவுகளை உரிய முறையில் பதிவு செய்வதற்காக மீனவர்களுக்கு டெப்(TAB) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீன் ஏற்றுமதிக்கு தடைவிதித்திருந்தமைக்கு பிரதான காரணம் சர்வதேச கடற்பரப்பில் பிடிக்கும் மீன்கள் தொடர்பில் சரியான தரவு பதிவு இன்மையே என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments