TV ஊடாகவும் ஒட்டுக் கேட்கும் CIA: விக்கிலீக்ஸ் தகவல்


அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ தொலைக்காட்சிப் பெட்டி ஊடாகவும் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

விண்டோஸ், அன்ட்ரொய்ட், அப்பள் ஓ.எஸ் மற்றும் குறித்த இயங்குதளங்களைக் கொண்ட பெரும்பாலான சாதனங்கள் ஊடாக உளவு பார்க்கும் சி.ஐ.ஏ சம்சுங் ரக தொலைக்காட்சிப் பெட்டியூடாக உரையாடல்களை ஒலிப்பதிவு செய்து வேவு பார்த்து வந்துள்ளதாக குறித்த தகவல் தெரிவிக்கின்றது.

முன்னதாக அமெரிக்கா தேசிய பாதுகாப்பு முகவர் நிலையம் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் ஊடாக வேவு பார்த்து வந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்ததன் பின்னணியில் பாரிய சர்ச்சைகள் தோன்றியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

Comments