UK: ஹரோ பள்ளிவாசலில் அமைச்சர் ரிசாதுடன் இன்று மக்கள் சந்திப்பு!
தற்போது ஐக்கிய இராச்சியம் விஜயம் செய்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்களை சந்திக்கும் விசேட நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை இரவு இஷா தொழுகையுடன் இடம்பெறவுள்ளதாக UK இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களுக்கான விசேட மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஐக்கிய இராச்சியம் விஜயம் செய்துள்ள அமைச்சர் அங்குள்ள இலங்கை முஸ்லிம்களுடன் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதுடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடவுள்ளார்.
இடம்: ஹரோ இலங்கை பள்ளிவாசல்
நேரம்: இரவு 7.45


Comments
Post a Comment