ஹக்கீமிற்கு எதிரான உண்மைகாண் பயணம் தெளிவுபடுத்துவது என்ன? சட்டத்தரனி அன்சில் (video)
(ihzana fareed)
கடந்த வருடம் மார்ச் மாதம் 19ம் திகதி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு போராளிகளை ஒன்று சேர்த்து இடம் பெற்ற பாலமுனை தேசிய மாநாட்டினை முன்னின்று நடாத்திய செயற்பாட்டு குழுவின் தலைவரான இந்த அன்சில் பைத்திய காரனைப்போல் அதிகாரமில்லாமல் கட்சிக்கு வெளியிலிருக்கும் ஹசன் அலியினால் கூட்டப்பட்டிருக்கும் கூட்டத்தின் மேடையில் இருக்கின்றான் என்ற கேள்வி உங்கள் மத்தியில் தோன்றலாம்.
அதனை நான் நியாயமான கேள்வியாகவே பார்க்கின்றேன் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரனியுமான அன்சில் அல்-அமீரி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியினால் நிந்தவூரில் 03.03.2017 அன்று முஸ்லிம் காங்கிரசின் தலைமை அப்துர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக நடாத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் சட்டத்தரனி அன்சில் தனது உரையில் :- கடந்த வருட தேசிய மாநாட்டில் ஹசன் அலி கலந்து கொள்ளவில்லை ஆனால் இன்று அதிகாராமற்ற நிலையில் ஒரு வடத்திற்கு பின்பு ஹசன் அலியினால் நடத்தப்படுகின்ற கூட்டத்திற்கு அன்சில் வந்திருப்பது சம்பந்தமாக நீங்கள் எல்லோரும் நினைப்பது நியாயம் என்றே எனக்கு தோன்றுகின்றது. அதே போல் எனக்குள்ளும் பெரும் அதியமாகவே இந்த விடயம் பார்க்கபடுகின்றது.
தெரிந்தவரை மாத்திரமே நாங்கள் உண்மைகளை அறிந்தவர்களாக இருந்தோம். தெரியாத ஒன்றை கற்பனை செய்து ஒருவரை பிழை கூறுகின்ற மடத்தனத்தினை நாங்கள் ஒரு பொழுதும் செய்யப்போவதில்லை, செய்ததுமில்லை. அந்த மாநாட்டிற்கு பிறகு நடந்த அனைத்து விடயங்களிலும் இருந்த சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்காக உண்மைகான் பயணம் ஒன்றினை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.
நான் என்னுடன் எல்லா விடயங்களிலும் ஒத்துவருக்கின்ற ஆத்ம நண்பராக இருக்கின்ற நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிரும் அவருடன் இணைந்து இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து கொலம்பஸ் நாடுகான் பயணம் மேற்கொண்டது போன்று கட்சிக்குள் எங்களுடைய உண்மைகான் பயணத்தினை மேற்கொண்டிருந்தோம்.
அதுவரை எங்களுக்கு இருந்த விசுவாசங்கள், நம்பிக்கைகள் என்பன அடுத்தபக்கங்களை திரும்பி பார்ப்பதற்கு தடைவிதித்திருந்தது. நாங்கள் கூட குரல்களாக அல்லது எங்களிடம் இருந்த விசுவாசங்கள் எங்களை குரல்களாக ஆக்கிவிட்டிருந்த சூழ் நிலையில் பிரச்சனைகள் வருகின்ற பொழுது ஒரு இயற்கை நிதி கோட் பாட்டிற்கு உட்பட்டு இரண்டு பக்கங்களும் ஆராய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே எல்லா பக்கங்களையும் தெளிவாக அறிய வேண்டும் என்ற நோக்கிலே எங்களுடைய உண்மைகான் பயணத்தினை சுமார் பத்து மாதங்களாக தியாகத்துடன் மேற்கொண்டு வந்தோம்.
அதன் அடிப்படையில் எங்களுக்கு மிகவும் துலாம்பலமாகவும், மிகவும் வெளிப்படையாகவும் கிடைத்த உண்மைகளின் அடிப்படையின் விளைவுதான் தற்பொழுது எங்களுடைய ஹசன் அலியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேடையில் நான் இருப்பதற்கான முக்கிய காரணம் என தெரிவித்தார் சட்டத்தரனி அன்சில்.
மேலும் குறித்த ரவூப் ஹக்கீமிற்கு எதிரான ஹசன் அலியின் மேடையில் தான் பத்து மாதங்களாக மேற்கொண்ட உண்மைகாண் பயணத்தின் பொழுது தான் பெற்றுகொண்ட அசத்தியத்திற்கு எதிரான உண்மைகள் என்ன என்பது சம்பந்தமாக சட்டத்தரனி அன்சிலினால் விரிவாக கூறப்பட்ட முக்கிய கருத்துக்களை கொண்ட காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment