ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற தேர்தல் (video)
(ihzana fareed)
இந்த நல்லாட்சி அரசாங்கமானது சிறந்ததொரு ஜனநாயக நாடாக எமது நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் மாணவ சமூதாயத்திற்கு ஊழலற்ற ஜனநாயக ரீதியிலினான தேர்தல் முறைகளை எவ்வாறு எதிர்காலத்தில் கையாண்டு இந்த நாட்டினை சிறந்ததொரு அரசியல் கலாச்சாரத்திற்குள் மாற்றியமைக்கலாம் என்ற பார்வையே கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டு பாடசாலைகளில் இடம் பெறுகின்ற வியமாகவே மாணவர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் முறைமை பார்க்கபடுகின்றது.
அந்த வகையிலே இவ்வருடம் முதற் தடவையாக இடம் பெறுகின்ற மாணவர் பாரளுமன்ற தேர்தலானது ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இன்று 23.03.2017 வியாழக்கிழமை இடம் பெற்றது.
எவ்வாறு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் ஜானாதிபதி, பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூரட்சி தேர்தல்கள் சகல சட்ட திட்டங்களுடன் இடம் பெருமோ அதனை முற்றிலும் ஒத்தாகவே ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும் முதலாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடந்தேரியது. குறித்த தேர்தல் விடயத்திலும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை தேசியத்திற்கு எடுத்துகாட்டாக மாறியுள்ளமையினை நேரடியாக தேர்தலை பார்த்த பொழுது அவதானிக்க கூடியதாக இருந்தது.
மாணவர்களுக்கு ஜனநாயக ரீதியில் எவ்வாற்று தேர்தல் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்தில் இந்த நாட்டினை ஆட்சி செய்யக்கூடிய மாணவர்கள் எவ்வாறு தேர்தல் சம்பந்தமான் நடை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்ற முக்கிய காரணங்களே இந்த தேர்தலின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது என தனது கருத்தினை தெரிவித்தார் ஓட்டமாவடி தேசிய பாடசலையின் அதிபர் அல்-ஹாஜ் ஹலீம் இஷ்ஹாக்.
அத்தோடு மாணவர்கள் பாடசாலையில் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளான பொளதீக, சுகாதார, சுற்றுச்சூழல், கல்வி மற்றும் இன்னோரன்ன பிரச்சனைகளுக்கு இத்தேர்தல் மூலம் மாண்வர் பாராளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்காளலும், அமைச்சர்களாலும் பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அதற்காக தீர்வுகளுகாக அதிபர், வலைய, மகாண கல்வி அதிகாரிகள், மத்திய, மாகாண கல்வி அமைச்சர்கள், பிரமர், ஜனாதிபதி உட்பட அணைவரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாகவும், எதிர்காலத்திற்கு தேவையான நடைமுறை அனுபவமாகவும் அமையும் என தெரிவித்தார்.
குறித்த விடயம் சம்பந்தமான தேர்தலுக்கான அனுபவத்தினை மாணவர்களுக்கு கொடுக்கும் முகமாகவும், பாடசாலை மாணவர் தேர்தலானலும் இவ்வாறுதான் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது இன்று இடம் பெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்கான கணிஸ்ட்ட ,சிரேஷ்ட தலைமை அலுவலர்களாக பாடசாலை ஆசிரியர்களையும், தேர்தல் கண்கானிப்பாளர்களாக முன்னாள் கோட்டக்கள்வி அதிகாரை ஏம்.எம்.ஏ.காதர் அதிபர், முன்னாள் அதிபர் எம்.சீ.எச்.முகம்மட், பிரதி கல்வி பணிப்பாளர் அபூபக்கர் றிஸ்மியா, ஆசிரியர் ஆலோசகர் ஏ.எல்.சலாம், பிரதேச கல்வி அதிகாரி எம்.எல்.ஏ.ஜுனைட், இணைப்பு கோட்டக்கல்வி அதிகாரி எம்.யூ.எம்.நசீர், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிபாளர் எச்.எம்.எம்.றுவைத் மற்றும் இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களையும் கடமைக்கு அமர்த்தியிருந்தது.
மேலும் ஒட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலின் காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment