02 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மாமனார் தலைமறைவு –
ABDUL SALAM YASEEM
திருகோணமலை, தோப்பூர், அல்லைநகர் பகுதியில் 03வயது மற்றும் 09 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாதம் 03ம் திகதி தனது 32 வயதுடைய தம்பியான ஜெனீபர் என்பவரினால் தனது 03 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தனர்.
இதனையடுத்து சிறுமியை சோதனையிட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஜே.சி.சமரவீர தாயார் வழங்கிய தகவலையடுத்து வீட்டிலிருந்த 09 வயது சிறுமியையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை 09 வயது சிறுமியை விசாரித்த போது சிறுமியும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரியவந்ததையடுத்து இச்சிறுமியையும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 32 வயதுடைய மாமா கொழும்பில் கடையொன்றில் வேலை செய்து வருவதாகவும் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
மூதூர் பொலிஸார் இவரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments
Post a Comment