வெளிநாட்டு வே.வா. பணியகத்துக்கு 120 கோடி இலாபம்!


வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 1.2 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் தலதா அத்துகோறள.

2015ல் 338 மில்லியன் மற்றும் 2016 கணக்காண்டில் 642 மில்லியன் இலாபமீட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது 45 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதற்தடவையாக 1.2 பில்லியன் இலாபத்தை பணியகம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் கட்டணம் முதல் காப்புறுதி உட்பட பல்வேறு கட்டணங்கள் பணியகத்தால் அறவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments