120 மில்லிக் கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் கைது


120 மில்லிக் கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர், திரு கோணமலை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை சமுத்திராகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்
.
குறித்த நபர், ஹெரோய்னுடன் திருகோணமலை மீன் சந்தைப்பகுதியில் நடமாடுவதாகத் தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்து இடத்துக்குச் சென்று, சந்தேகநபரை சோதனை செய்த போது, இவை கைப்பற்றப்பட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக இவரை 
திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும்  போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்  பொலிஸ் பொறுப்பதிகாரி ஜனோசன் தெரிவித்தார்.

Comments