கிறீன்லேன்ட் நிறுவனத்தின் 1400 மில்லியன் ரூபாய் செலவில் அதிசொகுசு மாடிமனைகளின்  ஆரம்ப விழா

எம்.ரீ. ஹைதர் அலி

கிறீன்லேன்ட் நிறுவனத்தின் 1400 மில்லியன் ரூபாய் செலவில் கொள்ளுபிட்டி மற்றும் பம்பலபிட்டி பகுதிகளில் அமைக்கபடவுள்ள இரண்டு அதிசொகுசு மாடிமனைகளின் ஆரம்ப விழா  கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் மிக பிரமாண்டமான முறையில்  நடைபெற்றது. 

இவ்விழாவை கீறீன்லேண்ட் புரபட்டி  டிவலப்மண்ட் ( Greenland property developers) நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். முஹம்மட் ஜிப்ரி மற்றும் அதன் பணிப்பாளர் ஏ.ஆர். முஹம்மமட் சிராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு விஷேட அதிதியாக புனர்வாழ்வு மீள்குடியேற்ற சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ. டி.எம். சுவாமிநாதன் அவர்களும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களும், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் கௌரவ .ஏ.எச்.எம். பௌஸி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

சிறப்பு அதிதிகளாக பிரபல அதிரடி நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஐயசூர்ய, சவூதி அரேபியாவில் இருந்து வருகைதந்த general Dr. Mohommad M AL Juha மற்றும் Bader AL Juhani ஆகியோரோடு பிரபல சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிரகாஷம்
சவூதிக்கான முன்னைநாள் தூதுவர் Dr. உதுமாலெப்பை  
ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, மாநகர சபை உறுப்பினர்கள், வெளிநாட்டு 
அதிதிகள் உட்பட பிரபல வர்த்தகர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் - இம்றான் நைனார் 

Comments