பெண்களின் திருமண வயது 18: இந்தோனேசிய பெண் உலமாக்கள் பத்வா!


இந்தோனேசியாவில் இடம்பெற்ற மூன்று நாள் பெண் உலமாக்களின் மாநாட்டினை தொடர்ந்து அந்நாட்டில் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 16 இலிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் என பத்வா வெளியிட்டுள்ளது.

ஜாவாவில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் இந்தோனேசிய பெண் மார்க்க அறிஞர்களே அதிகம் பங்கேற்ற போதிலும் சவுதி, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இவ்வாறு பத்வா ஒன்று வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்வு ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments