சிங்கள புத்தாண்டு; 185 பேர் வைத்தியசாலையில்

சிங்கள தமிழ் புத்தாண் உதயமானதும் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை இம்முறை 16 வீதத்தால் குறைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வீதி மற்றும் வீடுகளில் ஏற்படும் விபத்துக்கள் மூலம் நூற்றுக்கணக்கானோர் வருடாந்தம் அதிகாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவது வழக்கம். இதனடிப்படையில் இம்முறை இதுவரை 185 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் 70 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது 16 வீதம் குறைவான எண்ணிக்கையிலேயே புதுவருட விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

Comments