இன்று வலம்புரி கவிதாவட்டத்தின் 36 வது அல்லாமா எம்.எம்.உவைஸ் கவியரங்கு.
இன்று வலம்புரி கவிதாவட்டத்தின்
36 வது அல்லாமா எம்.எம்.உவைஸ் கவியரங்கு.
கவிஞர் பிரேம் ராஜ் அவர்களின் தலைமையில் கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் வலம்புரி கவிதாவட்டத்தின் தலைர் நஜ்முல்ஹுசைன் அவர்களும் இன்னும் இளநெஞ்சம் முர்ஸிதீன் கவிஞர் மேமன் கவி ஈழ கணேஷ் வரதராணி
அவர்களும்
ஒளி அரசி ஆசிரியர் ஜனகன் ஆசிரியர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்னும் பல கவிஞர்களும் கலந்து கவிதைகள் பாடி சிறப்பித்தனர்.
கவியரங்கிற்கு சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்த(காப்பியக்கோ) டாக்டர் ஜின்னா ஸரீப்தீன் அவர்கள் அல்லாமா எம்.எம்.உவைஸ் அவர்களைப்பற்றி சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் தன்னை கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த நல்ல உள்ளங்களைப் பற்றியும் நினைவு கூறிதுடன் அவர்களுக்கு நன்றி கூறினார்கள்.
இறுதியாக இளைய தலைமுறையினரைப் பார்த்து...
ஓ...
இளைஞனே!
இஸ்லாமிய இலக்கியம்
பேச ஆசைப்படுகிறாயா?
பேசு நீ..
முதலில் அல்லாமா
உவைஸ் அவர்களை
பற்றி....
படி அவர் இலக்கிய
ஆற்றல் பற்றி...
இப்படி அழகாக கூறிய அவர்
மேலும் அவருடைய இலக்கிய பயணங்களில் அல்லாமா உவைஸ் அவர்களுக்கும் காப்பியக்கோ ஜின்னா அவர்களுக்குமிடையிலான வெளிநாட்டு அனுபவங்களையும் மிக தாழ்மையாக கவியரங்கில் கலைஞர்கள் மத்தியில் நட்பினிமையோடும் இனிமையான குரலிலும்
உரையாற்றினார்....
கவிதை பாடியவர்கள்.
தலைமை கவிஞர் எம். பிரேம்ராஜ் 1. லோகநாதன் 2. சுபாஷினி பிரணவன்
3. தாஜ்மஹான் 4. ரஷீத் எம் இம்தியாஸ் 5. வெலிமடை ஜஹாங்கீர் 6. பாணந்துறை நிஸ்வான் 7. தனபாலன் 8. தேஜஸ்வினி 9. கலேவல ஷப்னா 10. பாயிஸா ஹமீத் 11. கம்மல்துறை இக்பால் 12. கவிக்கமல் ரஸீம் 13. மாத்தளை கமால் 14. உணர்ச்சி பூக்கள் ஆதில் 15. மிஹிந்தலை பாரிஸ் 16. கிண்ணியா அமீர் அலி
-ஆதில்-


Comments
Post a Comment