மூதூர் மத்திய கல்லூரியின் 95 வருட பூர்த்தி: பழைய மாணவர்களினால் நடை பவணி


மூதூர் மத்திய கல்லூரியின் 95 வருட பூர்த்தியை முன்னிட்டு எதிர் வரும் மே மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை கல்லூரியில் இடம் பெறவுள்ள வர்த்தக கல்வி கண்காட்சியின் முன்னோட்டமாக இதற்காக நிதி சேகரிக்கும் வகையில் இன்று சனிக்கிழமை கல்லூரியின் பழைய மாணவர்களினால் நடை பவணி இடம் பெற்றது.கல்லூரியிலிருந்து ஆரம்பமாகிய இவ் நடை பவணி மூதூர் பிரதான வீதியூடாக ஆரம்ப இடத்தை வந்தடைந்தது.


இதில் மூதூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர், மூதூர் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி யாக்கூப் ஜெஸ்மி மற்றும் கல்லூரியின் பழைய மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Comments