கிண்ணியா தள வைத்தியசாலை போராட்டத்திற்கு தீர்வு கிட்டுமா?


திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் பல இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிக டெங்கு நோய் தாக்கத்தையும் மரணத்தையும் கிண்ணியா மண் சந்தித்துள்ளது.

தேசிய ரீதியில் டெங்கு மரண சம்பவங்கள் தொடர்பிலும் வைத்தியசாலை உபகரணப் பற்றாக்குறை இருப்பதையும் இங்கு இருக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட யாவரும் அறிந்த விடயம்.

பல காலம் தொட்டு கிண்ணியா தளவைத்தியசாலையானது வைத்தியர்கள் பற்றாக்குறை வைத்திய ஆய்வுகூட உபகரணங்கள் என ஒட்டு மொத்தமாக இவ் வைத்தியசாலையை மூட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய டெங்கு நோய் தாக்கத்தின் உயிரிழப்புகளுக்கு வைத்திய ஆளணி பொருட்கள் என்பனவே பற்றாக்குறை.

இது தரமுயர்த்தப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் இருந்திருந்தால் இந் நிலையை குறைத்திருக்கலாம்.

தற்போதைய கிண்ணியா தளவைத்தியசாலை தரமுயர்வுப் போராட்டமானது நேற்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருவதுடன் இதனை கண்டு கொள்ளாத அரச தரப்புக்கள் ஏன் காலதாமதம்?

கிண்ணியா மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்போராட்டத்தில் பங்கு கொண்டமை இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தையே காட்டுகின்றது.

கிண்ணியா தள வைத்தியசாலலை உடன் அமுலுக்கு வரும்வகையில் மத்திய அரசுக்கு ஒப்படைக்க தாமதம் வேண்டாம் என இளைஞர்கள் சமூகம் கோரிக்கையை முன்வைத்துள்ளது .

 கிண்ணியா தளவைத்தியசாலை தரமுயர்வு கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என மக்களால் தெரிவிக்கப்படுகிறது

எனவே இவ்விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கையை மேற்கொள்ளவும் என மேலும் கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

Comments