நாச்சியாதீவு சிலை விவகாரம் : தேரருக்கு நீதிவான் அறிவுரை

நாச்­சி­யா­தீவு பர்வீன்

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் நாச்­சி­யா­தீவு தோட்ட தக்­கியா பகு­தியில் அமைந்­துள்ள அர­ச­ம­ரத்தின் கீழ் புத்தர் சிலையை அமைக்க வேண்டும் என முயற்சி செய்து பிர­தே­சத்தில் இன­வா­தத்தை தூண்டும் முக­மாக செயற்­பட்ட ராஜாங்­க­னைய சாத்­த­னந்த தேரருக்கு எதி­ராக ஹிதோ­கம பொலி­ஸா­ரினால் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­­ருந்­தது.

முஸ்­லிம்­களும், சிங்­க­ள­வர்­களும்  ஒற்­று­மை­யாக வாழு­கின்ற பிர­தே­சத்தில் இன­வா­தத்தை தூண்­டி­யமை, பொது அமை­திக்குப் பங்கம் விளை­வித்­தமை, சட்டம் ஒழுங்­கினை தகர்த்­தமை போன்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த வழக்கு ஹிதோ­கம பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பிரபாத் கஸ்­தூரி ஆராச்­சி­யினால் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.  

இந்த வழக்கு நேற்று திங்­கட்­கி­ழமை அனு­ரா­த­புரம்  மேல்­நீ­தி­மன்­றத்தில் விசா­ர­ணைக்­காக எடுக்­கப்­பட்­டது. இந்த வழக்கு தொடர்­பாக குறிப்­பிட்ட பெளத்த பிக்கு சார்பில் இரண்டு சட்­டத்­த­ர­ணி­களும் முஸ்­லிம்­களின் சார்பில் சுமார் 10க்கு மேற்­பட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கி­னார்கள்.

குறித்த வழக்கு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி  என் .எம் . சஹீட், சட்­டத்­த­ரணி ருஸ்தி ஹபீப்   ஆகி­யோரின் வழி­காட்­டலில் சட்­டத்­த­ர­ணிகள் இயங்­கி­னார்கள். குறித்த தேர­ரிடம் அவ­ருக்­கெ­தி­ராக  குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ரிக்­கப்­பட்­டது.

 குறித்த நாச்­சி­யா­தீவு  பிர­தே­சத்தில்  பழ­மை­யான அர­ச­ம­ர­மொன்று  இருப்­ப­தனால் எதிர்­கா­லத்தில் முஸ்­லிம்கள் அதனை வெட்­டி­வி­டு­வார்கள் என்ற அச்­சத்­தி­னா­லேயே  அந்த  பிர­தே­சத்தில் புத்தர் சிலை­வைக்க முனைந்­த­தாக பிக்கு தெரி­வித்தார்.

பின்னர் ஹிதோ­கம  பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரியின் சாட்சியம் பெறப்­பட்­டது. 

நாச்­சி­யா­தீவு பிர­தே­ச முஸ்­லிம்கள் தம்மை சுற்­றி­யுள்ள சிங்­க­ளக்­ கி­ராம மக்­க­ளுடன் மிகவும் நட்­பு­டனும்,மரி­யா­தை­யு­டனும் பழ­கு­கின்­ற­வர்கள். வரு­டா­வ­ருடம் ஆண்­டி­று­தியில் நடாத்­தப்­படும் சிங்­க­ள­வர்­களின் பெர­ஹரா நிகழ்வை அவர்­களே செய்­கின்­றார்கள். சிங்­கள மத அனுஷ்ட்­டானம் ஒன்­றினை முஸ்லிம் கிரா­மத்தில் ஆரம்­பித்து சிங்­கள மத­கு­ரு­மார்­களை வர­வேற்று அவர்­க­ளுக்கு உணவு வழங்­கு­கின்ற ஒரு உயர்ந்த பண்­பினை இவர்கள் கொண்­டுள்­ளார்கள்.

தேசிய மத­நல்­லி­ணக்­கத்­திற்கும், ஒரு­மைப்­பாட்­டுக்கும் முன்­னு­தா­ர­ண­மாக திகழ்­கின்ற இந்­தப்­பி­ர­தே­ச முஸ்லிம் மக்­களை அச்­சத்­திற்குள் ஆட்­ப­டுத்­து­கின்ற செயற்­பாட்­டையே இந்த பிக்கு செய்­துள்ளார். இது சட்­டப்­படி குற்­ற­மான விட­ய­மாகும். எனவே இந்த விட­யத்தில் பிக்­கு­வுக்கு அறி­வு­றுத்தல் கொடுக்­கப்­பட்டும் அவர் தொடர்ந்து இன­வாத செயற்­பாட்­டி­னையே செய்­து­வ­ரு­கிறார் என்றார்.

பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­திய குறித்த பிக்­கு­வுக்கு மேல்­நீ­தி­மன்ற நீதி­வா­னினால் அறி­வுரை கூறப்­பட்­டது. தொடர்ந்தும் இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு அடுத்­த­வர்­களை புண்­ப­டுத்­து­கின்ற செயற்­பாட்­டினை தவிர்க்­கு­மாறு அவர் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டார்.

நேற்று திங்­கட்­கி­ழ­மையே (3) டான் பிரசாத் எனும் நபரும்  நாச்­சி­யா­தீ­வுக்கு புத்தர் சிலை வைக்க வரு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார். ஆனால் அப்­படி எந்த அசம்­பா­வி­தமும் நடக்­க­வில்லை. சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரவி பீரிஸின் மேற்­பார்­வையில் ஹிதோ­கம பொலி­ஸா­ரினால் இந்த முயற்சி நிறுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.


அந்த வகையில்  பெரும்பான்மை சிங்கள இனத்தைச்சேர்ந்த பலர் இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம்களுக்கு சார்பாக இயங்கினார்கள். அதில் குறிப்பாக அத்துருவெல்ல சத்தாதிஸ்ஸ தேரர், சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் அசோகா சேனாரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி கருணா ரத்தன ஹேரத், அமைச்சர் ஹரிசனின் சகோதரரான நியூட்டன், நாச்சியாதீவை சுற்றியுள்ள எட்டு விகாரைகளின் விகாராதிபதி போன்றோரை குறிப்பிட்டுக்கூற முடியும்.

Comments