இஸ்லாம் விடுக்கும் மே தினச் செய்தி

எம்.ஐ அன்வர் (ஸலபி)

மே தின வர­லாறு
18 ஆம் நூற்­றாண்டின் இறு­தி­யிலும் 19 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்­திலும் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் தொழி­லா­ளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்­டாயம் இருந்­தது. இதற்­கெ­தி­ராக குரல்கள் உலகின் பல நாடு­க­ளிலும் ஆங்­காங்கே எழத்­தொ­டங்­கின. இதில் இங்­கி­லாந்தில் தோன்­றிய சாசன இயக்கம் (chartists) குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 6 முக்­கிய கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர் இயக்­கங்­களை நடத்­திய இவ்­வ­மைப்பு தொழி­லா­ளர்கள் 10 மணி நேரம் பணி புரிய வேண்டும் என குரல் எழுப்­பி­யது.



1830 ஆம் ஆண்டு பிரான்ஸில் நெசவுத் தொழி­லா­ளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்­தனர். இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டனர். 1834 இல் ஜன­நா­யகம் அல்­லது மரணம் என்ற வாச­கங்­களை முன்­வைத்து போராட்­டத்தில் இறங்­கினர். ஆனால் இது தோல்­வியில் முடி­வ­டைந்­தது. ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள மெல்பேர்னில் கட்டடத் தொழி­லா­ளிகள் 1856 இல் 8 மணி நேர வேலை என்ற கோஷத்தை முன்­வைத்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வெற்­றியும் கண்­டனர்.

1896 ஏப்­ரலில் லெனின் எழு­திய சிறு பிர­சு­ரத்தில் ரஷ்யத் தொழி­லா­ளி­களின் நிலமை குறித்து விரி­வாக அல­சினார். மேலும் ரஷ்யத் தொழி­லா­ளி­களின் பொரு­ளா­தாரப் போராட்டம் அர­சியல் போராட்­ட­மாக எழுச்சி கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்­தினார். அந்த வகையில் தொழி­லா­ளி­களின் 8 மணி நேர வேலைக்­கான போராட்­டங்­களே ரஷ்யப் புரட்­சிக்கு வித்­திட்­டன எனலாம்.

அமெ­ரிக்­காவின் பல்­வேறு மாநி­லங்­களில் உள்ள தொழி­லாளர் இயக்­கங்­களை இணைத்து அமெ­ரிக்க தொழி­லாளர் கூட்­ட­மைப்பு என்ற இயக்கம் அமைக்­கப்­பட்­டது. இந்த இயக்கம் 1886 மே 1 ஆம் நாள் நாடு தழு­விய வேலை நிறுத்­தத்­திற்கு அறை­கூவல் விடுத்­தது. இந்த இயக்­கமே மே தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தது எனலாம். இந்த அறை­கூ­வலே மே முதல் நாள் சர்­வ­தேச தொழி­லாளர் தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தது. அடுத்த ஆண்­டி­லி­ருந்து உலக நாடுகள் பல­வற்­றிலும் விடு­மு­றையும் அறி­விக்­கப்­பட்­டது.

உல­க­ளவில் ஒவ்­வொரு வரு­டமும் மே மாதம் முதலாம் திகதி அனுஷ்­டிக்­கப்­படும் தொழி­லாளர் தினம் தொழி­லா­ளர்­களின் கோரிக்­கைகள், உரி­மைகள், சம்­பள உயர்வு, அவர்கள் எதிர்­கொள்ளும் அடிப்­படைப் பிரச்­சி­னைகள், அவ­லங்கள் என்­ப­வற்றை முத­லாளி வர்க்­கத்தின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரு­வ­தாக அமை­கி­றது. ஆனால் துர­திஷ்டம் யாதெனில் அன்­றைய தினம் கடந்­த­வுடன் தொழி­லா­ளி­களின் எந்த கோரிக்­கை­க­ளையும் முத­லாளி வர்க்கம் கண்­டு­கொள்­ளவே மாட்­டார்கள்.

என­வேதான் இச்­சந்­தர்ப்­பத்தில் உலக வழி­காட்­டி­யான இஸ்­லா­மிய மார்க்கம் தொழி­லா­ளி­களின் உரி­மைகள் தொடர்பில் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

இஸ்லாம் பேசு­கின்ற உரி­மைகள் இறை­வனால் வழங்­கப்­பட்டு நபி­ய­வர்­களால் நடை­மு­றைப் ­ப­டுத்­தப்­பட்­டவை. அவை ஏதோ ஓர் அர­சி­னாலோ அல்­லது சட்ட மன்­றத்­தி­னாலோ வழங்­கப்­பட்­ட­வை­யல்ல: மனித உரி­மைகள் சாசனம் ஒன்றை இந்த உலகில் முதன்­மு­த­லாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யது இஸ்லாம். உல­கி­லுள்ள அத்­தனை உயி­ரி­னங்­க­ளுக்கும் உரி­மை­க­ளையும் கட­மை­க­ளையும் வகுத்­த­ளித்­தி­ருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம். இறை­யச்­சத்தை அள­வீ­டாக வைத்து இனம்,  நிறம், மொழி, பிர­தேசம் ஆகிய வேறு­பா­டு­க­ளையும் தாண்டி மனித சமத்­து­வத்தை நிலை நாட்டும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.

இன்று பணமும், அதி­கா­ரமும், உடற் பலமும் உள்­ள­வர்கள் தமது அதி­கார எல்­லைக்குள் தொழில் புரி­ப­வர்­களை இழி­வா­கவும் தாழ்­வா­கவும் நடத்­து­வதை சமூ­கத்தில் பர­வ­லாக அவ­தா­னிக்க முடி­கி­றது. சில வேளை தொழி­லா­ளர்­களின் உரி­மைகள் மீறப்­ப­டு­வதும் அவர்கள் கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வதும் சர்­வ­சா­தா­ர­ண­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் இஸ்­லா­மிய மார்க்கம் தொழி­லா­ளர்­க­ளுக்கு மனி­தர்கள் என்ற வகையில் அவர்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்கும் உரி­மைகள் பற்றி சற்று நோக்­குவோம்.

01. தொழில் உரிமை (right to work)
அனைத்து படைப்­பி­னங்­க­ளிலும் அல்லாஹ் மனி­த­னையே உயர்­வாகப் படைத்­துள்ளான். தனக்­குரிய தேவை­களைத் தேடிப் பெற்று உழைத்துச் சம்­பா­திப்­ப­தற்­காக உடல் உறுப்­புக்­களைக் கொடுத்­தி­ருக்­கி­றான். கை, கால்கள் நல்ல நிலையில் உள்ள ஒருவன் எந்த நிலை­யிலும் உழைக்­காமல் சோம்­பே­றித்­த­னத்­துடன் வாழ்­வ­தையும் யாசகம் கேட்பதையும் இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை. இதற்­கான வழி­காட்­டல்­களை அல்-­குர்ஆன், அல்-­ஹ­தீஸில் நாம் காணலாம்.

பின்னர் (ஜும்ஆத்) தொழுகை நிறை­வேற்­றப்­பட்­டு­விட்டால் (பள்­ளி­யி­லி­ருந்து வெளிப்­பட்டுப்) புமியில் பர­விச்­சென்று அல்­லாஹ்­வு­டைய பேர­ருளைத் தேடிக்­கொள்­ளுங்கள். மேலும் நீங்கள் வெற்­றி­ய­டையும் பொருட்டு அதி­க­ம­திகம் அல்­லாஹ்வை நினைவு கூருங்கள். (63- –10)

நாம் அவ­ருக்கு (தாவூ­துக்கு) இரும்பை மிரு­து­வாக்­கி­யி­ருந்தோம் (மேலும் நிறை­வான போர்க்­க­வ­சங்­களைச் செய்­வீ­ராக அவற்றின் வளை­யங்­களில் (அளவை) ஒழுங்­கு­ப­டுத்­து­வீ­ராக’ என்றும் கூறினோம் (34-10,11)

உங்­களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்­துக்­கொண்டு தன்­னு­டைய முதுகில் விற­குக்­கட்டைச் சுமந்­து­கொண்டு விற்று வாழ்­வது மக்­க­ளிடம் யாசகம் கேட்டு வாழ்­வதை விடச் சிறந்ததாகும். (புகாரி-3406)

நாங்கள் நபி (ஸல்) அவர்­க­ளுடன் (மர்ருழ் ழஹ்ரான்) என்­னு­மி­டத்தில் அராகான் (மிஸ்வாக்) மரத்தின் பழங்­களைப் பறித்துக் கொண்­டி­ருந்தோம். “நபி (ஸல்) அவர்கள் அதில் கறுப்­பான பழத்தைப் பறி­யுங்கள் ஏனெனில் அவற்றில் அதுதான் நல்­லது என்று கூறி­னார்கள்” மக்கள் நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்­டி­ருந்­தீர்­களா? எனக கேட்­டார்கள் அதற்கு அவர்கள் ஆடு மேய்க்­காத இறைத்­தூதர் யாரேனும் உண்டா? என பதி­ல­ளித்­தார்கள். (புகாரி-3406)
ஆக நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபி­மார்­களும் ஆடு மேய்த்­தி­ருக்­கி­றார்கள் ஏதோ ஒரு தொழிலில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்.

02. தொழி­லா­ளர்­களை கண்­ணி­ய­மாக நடத்­துதல் வேண்டும் (right to honour)
     தொழி­லா­ளர்­களை மரி­யா­தை­யு­டனும், மனி­தா­பி­மா­னத்­தோடும் அணுக வேண்டும்: அவர்­களும் மனி­தர்கள் அவர்­களின் உணர்­வு­களை புண்­ப­டுத்தும் வகை­யிலோ அவர்­க­ளது சுய கௌரவத்தை பாதிக்கும் வகை­யிலோ நடத்­தாது சகோ­த­ரத்­துவ வாஞ்­சை­யோடு நடத்த வேண்டும். அல்லாஹ் நாடினால் தான் விரும்­பி­ய­வரை உயர்த்துவான். தான் விரும்­பி­ய­வரை தாழ்த்­துவான்.

ஒரு நொடிப் பொழுதில் ஒரு செல்­வந்­தனை ஓட்­டாண்­டி­யா­கவும் ஒரு ஓட்­டாண்­டியை செல்­வந்­த­னா­கவும் மாற்றும் வல்­லமை மிக்­கவன் அல்லாஹ்.
நபி (ஸல்) அவர்­க­ளுக்கு பணி­யா­ள­ராக கட­மை­யாற்­றிய அனஸ் பின் மாலிக் (ரழி) பின்­வ­ரு­மாறு கூறு­கி­றார்கள் “நான் நபி (ஸல்) அவர்­க­ளிடம் பத்து ஆண்­டுகள் பணி­யா­ள­ராக தொழில் புரிந்தேன் (என் மனம் புண்­படும் படி) சீ என்றோ (இதை) ஏன் செய்தாய் என்றோ நீ (இதை) இப்­படிச் செய்­தி­ருக்கக் கூடாதா? என்றோ அவர்கள் எனக்குச் சொன்­ன­தில்லை. (புகாரி- – 6038)

இந்த வகையில் முத­லா­ளிகள் தமது தொழி­லா­ளிகள் ஏதும் தவ­றுகள் விடு­கின்ற போது அல்­லது அவர்கள் புறத்தில் ஏதும் குறை­பா­டுகள் நேரிடும் போது அவர்­களை திட்­டு­வதோ, ஏசு­வதோ, தண்­டிப்­பதோ, சித்­தி­ர­வதை செய்­வதோ கூடாது. மாறாக அவ்­வே­ளை­களில் அவர்­களின் நிறை­களை கவ­னத்­திற்­கொண்டு அன்பு காட்ட வேண்டும், அவர்கள் விட்ட தவ­று­கனை முறை­யாக திருத்த வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்­க­ளிடம் வந்து அல்­லாஹ்வின் தூதரே! எனது பணி­யா­ள­ரிடம் ஏதும் தவ­று­களைக் காணும் போது அவ­ரிடம் எத்­தனை முறை மன்னிப்பை மேற்­கொள்ள எனக் கேட்டார்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் மெள­ன­மாக இருந்­தார்கள். அதற்கு அம்­ம­னிதர் மீண்டும் அவ்­வாறே கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்­வொரு நாளும் எழு­பது முறைகள் மன்னிப்பை மேற்­கொள்­வீ­ராக என பதி­ல­ளித்­தார்கள். (திர்­மிதி)

03.தொழி­லா­ளர்­களின் உடல் நலன் பற்றி கவனம் செலுத்­துதல் (right to good health)
நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள் “உங்­களில் ஒரு­வ­ரிடம் அவ­ரது பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்­ப­ணி­யா­ளரைத் தம்­முடன் அமர வைத்துக் கொள்­ளட்டும். அவ்­வாறு அவரை அமர வைத்­துக்­கொள்­ளா­வி­டினும் அவ­ருக்கு ஒரு பிடி அல்­லது இரு பிடிகள் அல்­லது ஒரு கவளம் அல்­லது இரு கவ­ளங்கள் உணவு கொடுக்­கட்டும். ஏனெனில் அதனை அவர் சமைக்கும் போது அதன் வெப்­பத்­தையும், அதன் சிர­மத்­தையும் சகித்துக் கொண்டார். (புகாரி – -5640)

மஃரூர் (ரழி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள் “நான் அபூதர் (ரழி) அவர்­களை (மதீ­னா­விற்கு அரு­கி­லுள்ள) ரபதா என்ற இடத்தில் சந்­தித்தேன். அப்­போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் அதே போல் அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்­ப­தை கண்டேன். அப்­போது (ஆச்­ச­ரி­ய­முற்­ற­வ­னாக) அதைப் பற்றி நான் அவ­ரிடம் கேட்­ட­தற்கு (நான்) ஒரு முறை ஒரு­வ­ருக்கு ஏசி­விட்டு அவரின் தாயைப் பற்­றியும் குறை கூறி­விட்டேன்.

அப்­போது நபி (ஸல்) அவர்கள் “அபூ தர்ரே! அவ­ரையும் அவ­ரது தாயையும் சேர்த்து குறை கூறி­விட்­டீரே! அறி­யாமைக் கால பழக்கம் குடி கொண்­டுள்ள மனி­த­ரா­கவே இருக்­கிறீர்! உங்­களின் அடி­மைகள் உங்­களின் சகோ­த­ரர்கள் அல்­லாஹ்தான் அவர்­களை உங்­களின் அதி­கா­ரத்­திற்கு கீழ் வைத்­தி­ருக்­கிறான்! எனவே ஒரு­வரின் சகோ­தரர் அவரின் அதி­கா­ரத்தின் கீழ் இருந்தால்! தான் உண்­ப­தி­லி­ருந்து அவ­ருக்கும் உண்ணக் கொடுக்­கட்டும். தான் அணி­வ­தி­லி­ருந்து அவ­ருக்கும் அணியக் கொடுக்­கட்டும். அவர்­களின் சக்­திக்கு மீறிய பணி­களை கொடுத்து அவர்­களை சிர­மப்­ப­டுத்த வேண்டாம். அவ்­வாறு நீங்கள் அவர்­களை சிர­ம­மான பணியில் ஈடு­ப­டுத்­தினால் அவர்­க­ளுக்கு நீங்கள் உத­வியாய் இருங்கள் எனக் கூறி­னார்கள். இத­னால்தான் நான் அணி­வதைப் போல என் அடி­மைக்கும் அணியக் கொடுத்தேன் என அபூதர் (ரழி) அவர்கள் கூறி­னார்கள். (புகாரி-30)

04. பணி­யா­ளர்கள் செய்ய முடி­யாத, சுமக்க முடி­யாத பணி­களை அவர்கள் மீது சுமத்­து­வது அவர்­க­ளுக்கு இழைக்கும் அநீ­தி­யாகும் (right to good physical). 
ஒவ்­வொரு முத­லா­ளியும் தன் கீழ் பணி­பு­ரியும் தொழி­லா­ளிகள் இயந்­திர மனி­தர்கள் அல்ல என்ற உண்­மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தான் அவர்கள் மீது சுமத்தும் பணிகள் அவர்­களால் நிறை­வேற்­றப்­பட சாத்­தி­ய­மா­ன­வையா என்­பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

“அவர்­களின் சக்­திக்கு மீறிய பணி­களை அவர்­க­ளுக்கு கொடுத்து அவர்­களைச் சிர­மப்­ப­டுத்த வேண்டாம். அவ்­வாறு நீங்கள் அவர்­களை சிர­ம­மான பணியில் ஈடு­ப­டுத்­தினால் அவர்­க­ளுக்கு உத­வி­யா­யி­ருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் அடிமை விட­யத்தில் கூறி­னார்கள். (புகாரி-30)

05. உரிய நேரத்­திற்கு ஊதியம் வழங்­குதல் (right to wage)
“வியர்வை உல­ரமுன் பணி­யா­ளரின் கூலியை கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள் (திர்­மிதி-11434). 
அதா­வது, முத­லாளி தன் பணி­யா­ள­ரி­ட­மி­ருந்து தேவை­யான பணி­களை வாங்­கி­விட்டு உரிய கூலியை கொடுப்­பதில் இழுத்­த­டிப்புச் செய்­வதோ மோசடி செய்­வதோ கூடாது.

“மறுமை நாளில் நான் மூன்று பேருக்கு எதி­ராக வாதா­டுவேன். ஒருவர் சுதந்­தி­ர­மான ஒரு­வனை அடி­மை­யாக்­கி­யவன் மற்­றவர் வாக்­கு­றுதி மீறி­யவர், (மூன்­றா­மவர்) ஒரு பணி­யா­ளரை கூலிக்­க­மர்த்தி, அவ­னி­ட­மி­ருந்து வேலை வாங்­கி­விட்டு அவ­னது கூலியை வழங்­கா­தி­ருந்­தவர். (புகாரி- – 2270)

தவிர தொழி­லா­ளிகள் தமது உரி­மைகள் தொடர்பில் குரல் கொடுக்கும் அதே நேரம் தமது கட­மைகள், பொறுப்­புக்கள் குறித்தும் பிரக்­ஞை­யோடு இருத்தல் வேண்டும். அந்­த­வ­கையில் ஒவ்­வொரு தொழி­லா­ளியும் தான் செய்யும் தொழிலை வணக்­க­மாக பார்க்க வேண்டும். பொது­வாக இன்று எல்லா மதங்­களும் உழைப்பை உலகில் பணத்­தையும் பொரு­ளையும் சம்­பா­திப்­ப­தற்­கான வழி­க­ளா­கவே பார்க்­கின்­றன. மாறாக, இஸ்­லா­மிய மார்க்கம் வாழ்வே வணக்கம் என்ற நிலைப்­பாட்­டிலே இருக்­கி­றது. ஒருவர் தொழுகை, நோன்பு, போன்ற இபா­தத்­களில் இருப்­பது போல தொழிலில் ஈடுபடும் போதும் வணக்கத்திலே இருக்கிறார்.

ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்ற புறத்தோற்றத்தை விட என்ன எண்ணத்தில் அதனைச் செய்கிறார் என்ற தூய சிந்தனையோடு குறித்த தொழிலை நோக்குவதே இம்மையிலும் மறுமையிலும் நிறைவான கூலியைப் பெற்றுத்தரக் கூடியது. ஒரு தொழிலாளி தனது பணியில் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கடமையாற்றவேண்டும். தனது தொழில் வழங்குநருக்கு அல்லது நிறுவனத்துக்கு முழு நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் பணியாற்றுவது மிக முக்கியமாகும். தனது பணியில் நேர முகாமைத்துவத்தையும், கடமை உணர்வையும் பேணக் கூடியவராகவும் தொழில் பற்றிய பூரண அறிவைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

“ உங்கள் (பணிகளை) திறன்படச் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (தம் பணியை) திறன்படச் செய்பவர்களை நேசிக்கிறான்” (02-195). எனவே தான் ஒவ்வொரு முதலாளியும் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளிகளின் உரிமைகளைப் பேணுகின்ற அதேவேளை ஒவ்வொரு தொழிலாளி யும் தனது கடமைகளையும் பொறுப்புக் களையும் கவனத்திற்கொண்டு செயற்பட்டால் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் பல நன்மைகளைப் பெறலாம்.

Comments