இறக்காமம் விவகாரம் ! அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதி செயளாலர் சந்திப்பு ..


இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி அபேகோனை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (27) சந்தித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இறக்காமத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகளை எடுத்துக் கூறியதுடன், விகாரை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டால் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வழி ஏற்படுமெனவும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களுக்கு நம்பிக்கையற்றுப் போகுமெனவும் தெரிவித்தார்.

அமைச்சருடனான இந்தச் சந்திப்பில், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியும் பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதியின் செயலாளாரிடம் இறக்காமத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபித்த அமைச்சர், இந்த நடவடிக்கை மூலம் அம்பாறை மாவட்டத்தில் காலம் காலமாக இருந்த சிங்கள - முஸ்லிம் நல்லுறவுக்குக் குந்தகம் ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Comments