அமைச்சர் ரிசாதின் அபிவிருத்திகளை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்….

வன்னி வட்டான்

வடக்கு மக்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் பாதிக்கப்படும், ஒடுக்கப்படும் எந்த சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்திற்காக துணிந்து குரல கொடுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஆற்றிவரும் பணியினை தாங்கிக் கொள்முடியாதவர்கள் இன்று மாவட்டத்தின் அபிவிருத்தி கூட்டம் தொ்ர்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அபிவிருத்தி குழு கூட்டம் என்பது 5 இணைத்தலைவர்கைளக் கொண்டு நடத்தப்படுவதானது ஒரு கரத்தையில் ஜந்து மாடுகளை கட்டி ஓடு என்று சொல்வது போலாக இன்று கேள்விக்குரியதாக மாறியுள்ளது என்பது தான் உண்மை.

,சகோதரர் காதர் மஸ்தான் என்.பி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அவரிடமே அதற்கான பதிலையும் தெரிவியுங்கள் என்று கேட்க தோன்றினாலும் கூட அவர் சொல்ல நினைக்கும் பதில் எவ்விதத்திலும் பொருத்தமானதாக அமையாது. காதர் மஸ்தான் பாராளுமன்றததுக்கு தவழும் பிள்ளை அவரது பேச்சாற்றல் என்பது விமர்சிக்க வேண்டியுள்ளது. உணர்வற்ற உப்பு சப்பு அற்ற பேச்சாக தான் அவற்றை குறிப்பாக மின்னலானவரன் அந்த பேட்டியில் பார்க்கின்ற போது தெரிகின்றது. இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கதைப்பது காலத்தினை வீணடிக்கும் செயலாகும் என்பது தொடர்பில் பலரும் ஏற்றுக்கொள்வார்கள்.

மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்லாது வவுனியா மற்றும் முல்லை மாவட்டங்களில் சுமார் 16 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. இந்த 16 பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டங்கள் தவிர 3 மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களையும் நடத்த வேண்டும்.

ஒரு நாளைக்கு இரு பிரதேச செயலக கூட்டங்களை நடத்தினாலும் 8 நாட்கள் பிரதேச அபிவிருத்தி கூட்டத்திற்கும், 03 நாட்கள் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அப்படியெனில் 11 நாட்கள் இந்த கூட்டங்களுக்கும் சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறை போக எஞ்சிவரும் தினங்களில் தான் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பணியினை செய்ய வேண்டும்.

நல்லாட்சி அராங்கம் அமைச்சர் றிசாதிடம் முதலில் ஒப்படைத்தது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தலைமைத்துவத்தினை அல்ல என்பதனை காதர் மஸ்தான் எம்.பி.புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சுப் பதவியினை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்படைத்த இந்த அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்களின் பெரும் எண்ணிக்கை நஷ்டத்தில் இயங்கியதுடன், சில நிறுவனங்கள் மூடும் அளவுக்கு காணப்பட்டதாகும்.

இதனை மீண்டும் புதுப்பித்து கொண்டுவர அமைச்சர் றிசாத் பதியுதீன் 30 தினங்களை செலவு செய்தாலும் அது போதாது என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறனெதொரு நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் கூட்டங்களை நடத்திவருகின்றதை காதர் மஸ்தான் எம்.பி.புரிந்துகொள்ள முயற்சிக்கமால் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

குறிப்பாக காதர் மஸ்தான் எம்.பி,கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசிய செய்தியொன்றினை வாசிக்க கிடைத்தது, தான் அரசியலுக்கு வந்தது பிரயோனசமற்றது என தெரிவித்திருந்தமை அரசியல் என்பது பணத்தக்காக செய்யும் வியாபாரம் அல்ல.  ஆனால் தான் வியாபாரி என்பதால் அரசியலுக்காக செலவு செய்யும் காலமும்,நேரமும் பிரயோசமில்லாத ஒன்று என்ற கருத்தை பிரதிபலிப்பனவாக இருந்தமையின் மூலம் காதர் மஸ்தான் எம்.பியாக வந்தும் எதனையும் உழைக்க முடியவில்லை என்பதாலும், அனுபவமும் ,திறமையும், செயல் திறமையும் கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக எதனை செய்தாலும் அது செய்பவருக்கு தோல்லியாகவே மாறிவருகின்றதை உணர்த்தியுள்ளதாகவே அறியமுடிகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் நேரமில்லை என்றால் எதற்கு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இருக்க வேண்டும், அதிலிருந்து அவர் விலகிக் கொள்ளட்டும் என்று சூசமாக கூறியிருப்பது, அவரது பொறுப்பற்றதும் ,திமிருத்தனமான கருத்தின் வெளிப்பாடாகவுமே பார்க்க தோன்றுகின்றது.

பொறுப்பற்ற சிறுபிள்ளை தனமான கருத்துக்களை சமூகத்திற்கு கூறி தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நற்பாசையில் யாரோ சொல்லிக் கொடுக்கும் சொற்களை கிளிப் பிள்ளை போன்று கூறுவது ஒரு வியாபாரியின் தரத்தினை எடுத்துக்காட்டுவனாக அமைந்துள்ளது.

காதர் மஸ்தான் போன்ற வர்களுக்கு அபிவிருத்தி குழுக் கூட்டங்களை தனித்து நடத்த முடியுமா அதிகாரிகள் அவருக்கு காது கொடுப்பார்களா என்றால் அது பூச்சியம் என்று தான் கூற வேண்டும். முசலி பிரதேச செயலாளருடன் முறுகலை கொண்டதன் மூலம் அரச நிறுவாகத்தினை தன்வசம் எடுக்க வேண்டும் என்ற ஆசையின் உச்சகட்டம் என்பதனை விடயமறிந்த பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர.

இந்த நிலையில் வெற்று வாய்ச்சவடல்கள் மட்டும் அபிவிருத்திக்கும், கௌரவத்திற்கும் போதுமான தகைமைகள் அல்ல என்பதை மஸ்தான் எம்.பி.புரிந்து கொள்ள வேண்டும் என முதலில் கேட்டுக் கொள்வதுடன், மாவட்ட அபிவிருத்தி குழுக்களினதோ, பிரதேச அபிவிருத்தி குழுக்களினதோ கூட்டங்களில் கலந்து கொள்ளவிருப்பமில்லை என்றால் மஸ்தான் எம்.பி தனது பணிகளை பார்க்கட்டும் என இதன் மூலம் அவரது கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

Comments