கிண்ணியா-அஹமட் லேன் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் இளைஞனொருவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் .
கிண்ணியா-அஹமட் லேன் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் இளைஞனொருவன் திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு (09) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கத்திக்குத்து இலக்கானவர் அதே இடத்தைச்சேர்ந்த ஏ.எம்.முஹ்ஸித் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-நண்பர்கள் மூன்று பேர் மரு அருந்தி கொண்டிருந்த வேளை விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த நிலையில் கத்தியால் குத்தியதாக தெரியவருகின்றது.
கத்திக்குத்துக்கு இலக்கானவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
கத்திக்குத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment