திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்புளுவென்ஷா


திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்புளுவென்ஷா A நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் 07 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் இன்று (22) தெரிவித்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சேவைப்பிரிவிற்கு (ETU) ஒரு நாளைக்கு காய்ச்சல் காரணமாக 25 பேருக்கும் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் 47 ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இணங்காணப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருவதாகவும் போதுமான வைத்தியர்களும் சிற்றூழியர்களும் இல்லாமையினால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

Comments