மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு வர்கைது

ABDUL SALAM YASEEM

கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் மேமாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) திருகோணமலை நீதிமன்ற 

பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெரியப்பாவான கிண்ணியா, நடுத்தீவு பகுதியைச்சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

குறித்த சிறுமியின் தந்தையும் உளநலம் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் தாய் மரணித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சிறுமி உறவினொருவரின் வீட்டில் இருந்ததாகவும் அப்போதே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கபட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

Comments