ஹக்கீமினுடைய முகத்திரையினை கிழிப்பதாக கூறிய பசீர் ஏன் மெளனம் காக்கின்றார்.? – நாபீர் கேள்வி

(ihzana fareed)

முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தனக்கும் கட்சியின் தலைமையான அமைச்சர் அல்-ஹாஜ் றவூப் ஹக்கிமிற்கும் இடையிலான பிரச்சனைகளை வைத்து பல மக்கள் சந்திப்புக்கள், பொது கூட்டங்கள் என தன் பக்கமுள்ள நியாயங்களை துணிவுடன் மக்கள் மயப்படுத்தி வருகின்றமை அம்பாறை மாட்ட அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் முக்கிய பேசு பொருளாக இருந்து வருகின்றது.

ஆனால் கட்சியின் தலைமையோடு தோலோடு தோல் நின்று கட்சிக்காக உழைத்து பல வருடங்கள் கட்சியினை வழி நடாத்திய நிலையில் தலைமையோடு முரண்பட்டு கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்ட முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் உற்பத்தி ஊக்குவிப்பு திறன் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தனது கட்சியின் தலைமை றவூப் ஹக்கீமினுடைய முகத்திரையினை கிழித்தெரிவதற்கான ஆதரங்கள் பல தன்னிடம் இருப்பதாகவும் பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்து விட்டு இன்னும் மெளனியாக இருந்து வருகின்றமைகான காரணம் என்ன? என பகிரங்க கேள்வி எழுப்புகின்றார் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர்.

மேலும் தனது கருத்தினை தெரிவிக்கும் உதுமான்கண்டு நாபீர் .. முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தனது மெளனத்தை தூக்கி வீசி விட்டு மக்களுக்கு தனதுபக்க நியாங்களையும், உண்மைகளை வெளிக்காட்ட போவதாக அவர் கூறிய விடயங்களையும் உண்மையான ஆளுமையுடன் மக்கள் மயப்படுத்தும் சரியான தருனம் இதுவாகும்.

ஆனால் பசீர் சேகுதாவூத் இன்னமும் அவர்பக்க நியாயங்களை மறைப்பதற்கான காரணத்தினையாவது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதே என்பதே நாபீர் பெளண்டேசனின் எதிர்பார்பாகவும் வேண்டுகோளாகவும் இருக்கின்றது எனது தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கின்றார் அல்-ஹாஜ் நாபீர்.

Comments