தைபா மகளிர் அரபுக் கல்லூரி அபார வளர்ச்சி கண்டுள்ளது; அஷ்ஷெய்க் அலியார் பாராட்டு

அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு அப்பிரதேசத்திலுள்ள கரைவாகு  பொலிவேரியன் புதிய நகரில் அனைத்து வசதிகளும் கொண்ட நிரந்தரக் கட்டிடக் தொகுதி ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதியும் காத்தான்குடி பலாஹ் அரபுக் கல்லூரியின் முதல்வருமான அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அத்துடன் சட்டம், ஒழுங்கு, தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா, சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் யூ.எல்.எம்.காசீம் மௌலவி, சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், பொறியியலாளர் கே.எல்.றஸீன், கலாநிதி றமீஸ் அபூபக்கர், அஷ்ஷெய்க் அபூஉபைதா உட்பட மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் உரையாற்றுகையில்; இப்பிராந்தியத்தில் பெண்களின் மார்க்கக் கல்விக்கு கலாபீடம் ஒன்று அவசியம் தேவை எனவும் அதனை சாய்ந்தமருதில் நிறுவப்பட்டுள்ள தைபா மகளிர் அரபுக் கல்லூரி நிறைவேற்றியுள்ளது எனவும் கடந்த ஐந்து வருட காலத்தில் இக்கல்லூரி அபார வளர்ச்சி கொண்டுள்ளதுடன் மாணவிகளின் அடைவு மட்டம் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார். 


Comments