மரிக்கார் நினைத்தபடி வீடுகள் கொடுக்க முடியாது: சம்பிக்க



மீதொட்டமுல்ல அனர்த்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் சர்ச்சைக்குரியவிதத்தில் நடந்து கொள்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அவர் நினைத்தபடி வீடுகளைப் பகிர்ந்தளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி சபையின் வீடுகள் விவகாரத்தில் 196 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக மரிக்கார் தெரிவித்து வருகிறார். எனினும், ஜனாதிபதி முன்னிலையில் தான் தெளிவுபடுத்தியும் கூட வேண்டுமென்றே அவர் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாக சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments