பொதுமக்களுக்கு சமைத்த உணவு வழங்க அனுமதி பெற வேண்டும்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
அம்­பாறை, இறக்­காமம் பிர­தே­சத்தில் அண்­மையில் ஏற்­பட்ட உணவு ஒவ்­வாமை அனர்த்­தத்­தி­னை­ய­டுத்து கல்­முனை பிராந்­திய சுகா­தார பணிப்­பா­ள­ருக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில்; நடை­பெரும் பாரி­ய­ள­வி­லான விசேட நிகழ்­வி­களில் சமைக்­கப்­படும் உண­வு­களை பொது மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு முன்னர் சுகா­தார அதி­கா­ரி­களின் அனு­ம­தியை பெற வேண்டும் என கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தெரி­வித்தார். 

இறக்­காமம் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற அனர்த்தம் தொடர்­பாக சுக­தார துறை உய­ர­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அக­மட்­டினால்  கல்­முனை மாநா­கர சபையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­டத்தில் கலந்து கொண்டு இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,
இறக்­காமம், வாங்­காமம் பிர­தே­சத்தில் அன்­மையில் ஏற்­பட்ட உணவு ஒவ்­வா­மை­யினால் ஏற்­பட்ட அனர்த்தம் தற்­போது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் இறக்­காமம் பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களில் அதி­க­மானோர் சிகச்­சையை பெற்று வீடு திரும்­பி­யுள்­ளனர்.

குறித்த சம்­ப­வத்தில் இது­வரை 3 பேர் மர­ணித்­துள்­ளனர். 950 பேர் பாதிக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு 03 கட்­டங்­க­ளா­க­மாக வைத்­திய சேவைகள் வழங்­கப்­பட்­டன.

கல்­முனை பிராந்­திய ஆதார வைத்­தி­ய­சா­லை­க­ளிலும், பிர­தேச வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அம்­பாறை போதனா வைத்­தி­ய­சா­லையில்  இருவர் அவ­சர சிகிச்­சைப்­பி­ரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி­கக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­தா­வர்­களில் அதி­க­மானோர் சிகிச்­சையை பெற்று வெளி­யே­றி­யுள்­ளனர். தற்­போது 20 பேருக்கும் குறை­வா­ன­வர்­களே தொடர்ந்தும் சிகிச்­சையை பெற்று வரு­கின்­றனர்.

இவ்­வ­னர்த்­தத்தில் மர­ணித்­த­வர்­க­ளுக்கு நஸ்ட ஈடு வழங்­கு­வது தொடர்­பா­கவும்,  மேற்­படி திடீர் அனர்­தங்­களின் போது வைத்­தி­ய­சா­லைகள், உள்­ளு­ராட்சி மன்­றங்கள், சுகா­தார துறை உத்­தி­யோ­கத்­தர்­களின் அவ­சர செயற்­பா­டுகள் அhப்­ப­ணிப்பு மிக்­க­ன­வாக அமைய வேண்டும்.

முர­ணித்­த­வர்­களின் மர­ணத்­திற்­கான மருத்­துவ அறிக்கை கிடைக்­க­வுள்­ள­துடன், குறித்த பிரச்­சி­னைகள் தொடர்­பான முழு­மை­யான அறிக்­கையை உhயி அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக சமர்ப்­பிக்­கு­மாறும் கேட்­டுக்­கொண்டார். 

இதே­வேளை இப்­பி­ர­தே­சத்தில் சில நாட்­க­ளுக்கு தொடர்ந்தும் வைத்­தி­யர்கள், தாதி­யர்­களை விசேட கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்கும் 24மணி­நேர வெளி­நே­யா­ளர்­பி­ரிவை இயக்க வைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன் போது கிழக்கு மாகாண  முதலமைச்சா், முதலமைச்சின் செயலாளர் அதன் அதிகாரிகள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அதன் அதிகாரிகள் பிராந்திய வைத்திய பணிப்பாளர், உள்ளுராட்சி திணைக்கள செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொணடனர் .

Comments