கட்சியைப் பிரித்த பாவம் மைத்ரியையே சேரும்: மஹிந்த


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிரித்த பாவம் ஜனாதிபதி மைத்ரிபாலவையே சாரும் என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

கட்சியைத் தான் ஒப்படைக்கும் போது ஒரே அமைப்பாக இயங்கி வந்த போதிலும் நாளடைவில் இரு வேறு பிரிவுகளாக கட்சி பிளவுற்றமைக்கும் மைத்ரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ள மஹிந்த, ஒற்றுமையாக சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்புவார் எனும் நம்பிக்கையிலேயே தாம் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments