நாபீர் பெளண்டேசனின் உயர் பீட உறுப்பினராக முஸ்லிம் காங்கிரசின் தீவிர போராளி வஹாப் ஜலால்டீன் நியமணம்….
(Abdul Fareed)
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே அம்பாறை மாவட்டத்தில் அதிலும் முக்கியமாக கல்முனை பிரதேசத்தில் கட்சியினை வளர்ப்பதற்கு பெரும் தலைவர் அஸ்ரப்போடு தோலோடு தோல் கொடுத்த கல்முனை குடியினை சேர்ந்த அப்துல் வஹாப் ஜலால்டீன் நாபீர் பெளண்டேசனின் உயர் பீட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் உறுதிப்படுத்தினார்.
ஆரம்ப காலத்தில் கல்முனை பிரதேசத்தில் ஜலால் ரேடியோ இண்டபிரேசின் தலைவர் என அழைக்கப்பட்ட வஹாப் ஜலால்டீன் குறித்த நியமணம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில்… நாங்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை ஒரு தேசிய கட்சியாகவும், பெரும் தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரஃபினுடைய வழி காட்டலில் முஸ்லிம்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற காரணத்தினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த அதே நேரத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்களுக்கு மத்தியிலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை வளர்த்தெடுப்பதில் இன்று வரைக்கும் பெரும் பங்கு வகித்தவர்களில் கல்முனை பிரதேசத்தில் நானும் ஒருவன். அதற்கு கல்முனை மக்களே சான்றுபகிருவார்கள்.
அது மட்டுமல்லாமல் பிரதி அமைச்சர் ஹரீசின் தீவிர ஆதரவாளராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் இன்று வரைக்கும் இதய சுத்தியுடன் செயலாற்றி வந்துள்ளேன். ஆனால் இன்று கட்சியின் தலைமையும், தலைமை சர்வதிகார போக்குடன் எடுக்கின்ற முடிவுகளுக்கு ஆதரவளிக்கின்ற உயர்பீட உறுப்பினர்கள் எல்லோரையும் பார்க்கின்ற பொழுது தற்போதைய முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தினாலும், கட்சியினாலும் கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களினுடையா காணி பிரச்சனையாக இருந்தாலும் சரி, அரசியல் சார்ந்த ஏனைய உரிமைகளாக இருந்தாலும் சரி அதற்கான சரியான தீர்வினை ஒரு பொழுதும் பெற்றுக்கொடுக்க போவதில்லைஎன்பது மிகத்தெளிவான விடயமாக இருக்கின்றது.
அதன் அடிப்படையில் எமக்கு ஒரு புதிய அரசியல் தலைமையினை உருவாக்குகின்ற கட்டாய தேவை இருக்கின்றது. அல்லது சரியான அரசியல் கலாச்சாரத்தினை மக்கள் மயப்படுத்தும் தலைமையின் கீழ் சமூக சிந்தனையுடன் ஒன்று பட்டு செயற்பட வேண்டிய இக்கட்டான சூழ் நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே சம காலத்தில் மிகவும் நிதானமாகவும், எவருடைய பணத்திற்கும் சோரம் போகாத வகையில் பல சமூக சேவைகளை செய்துவருக்கின்ற நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் நாபிரின் அரசியல் நகர்வுகளுக்கும், அவருடைய அரசிய சிந்தனைகளுக்கும் ஆதரவளித்து அவருடைய சமூக சிந்தனைமிக்க கொள்கையினை மக்களுக்கு தெளிவுபடுத்துவதானது நியாயமான விடயமென நான் நினைக்கின்றேன்.
ஆகவேதான் நீண்ட காலமாக என்னுடன் நட்பினை கொண்டுள்ள பொறியியலாளர் நாபீர் ஹாஜியாருடைய வேண்டுகோளுக்கு அமைவாகவும், எனது தனிப்பட்ட சமூக சிந்தனையுடனான முடிவின் அடிப்படையிலும் எதிர் காலத்தில் நாபீர் பெளண்டேசன் எடுக்கின்ற அரசியல் நகர்வுகளுக்கு என்னாலான அனைத்து உதவிகளையும் கல்முனை பிரதேசத்திலிருந்து நாபீர் பெளண்டேசனுக்கு கொடுக்க தயாராக இருக்கின்றேன். அந்த வகையிலேயே பெளண்டேசன் எனக்களித்துள்ள பொறுப்பு வாய்ந்த உயர் பீட உறுப்பினர் எனும் பதவியினை எதுவித மாற்றுக்கருத்தும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு செயலாற்ற உள்ளதாக புதிதாக நாபீர் பெளண்டேசனினால் உயர்பீட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கல்முனை குடியினை சேர்ந்த அப்துல்லா வஹாப் ஜலால்டீன் தெரிவிக்கின்றார்.

Comments
Post a Comment