வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் நல்லெண்ண உதவி


இலங்கையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் 3000 மெற்றிக்தொன் அரிசியை  அனுப்பிவைத்துள்ளது.

குறித்த அரிசி 3 கப்பல்களினூடாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் கிலோகிராம் அரசியை வழங்குவதற்கு பாகிஸ்தான் பிரதமர் அனுமதியளித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக குறித்த மூவாயிரம் கிலோகிராம் அரசி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 7 ஆயிரம் கிலோகிராம் ஏப்பரல் மாதத்திற்குள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Comments