சவுதி: ரியாத் எல்லையில் புதிய ‘பொழுது போக்கு’ நகரம்


சவுதி அரேபிய தலை நகர் ரியாத் எல்லையில் புதிய பொழுது போக்கு நகரம் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

2022ம் ஆண்டு நிறைவடையும் வகையில் அதற்கான நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாச்சாரம், பொது போக்கு மற்றும் விளையாட்டு அம்சங்களுடன் இப்பொழுது போக்கு நகரம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதியின் விசன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகவே இத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments