‘இளமை’ இன்ஜெக்ஷன் பாவிக்கவில்லை; மஹிந்த மறுப்பு


தான் இளமைப் பொலிவுடன் இருப்பதற்கு அமெரிக்காவிலிருந்து விசேட ஊசி வகையைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலும் வைத்து முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இவ்வாறு தெரிவித்திருந்ததன் பின்னணியில் மினுவன்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அதனை மறுத்துள்ள மஹிந்த, முடிந்தால் அதற்கான பற்றுச்சீட்டுக்களைக் காட்டுமாறு பதிலளித்துள்ளதுடன் அரசாங்கம் தன் மீதான காழ்ப்புணர்வில் இவ்வாறு பேச வைக்கிறது எனவும் முடிந்தால் நேர்வழியில் தன்னை வீழ்த்துமாறும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

Comments