(திருகோணமலையில் இரண்டு பாடசாலைகளில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிப்பு
திருகோணமலை நகர்பகுதியில் இரண்டு முக்கிய பாடசாலைகளில் டெங்கு பரவும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் அதிகளவில் இப்பகுதிகளைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
திருகோணமலை பொது வைத்தியசாலையின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
இச்சுற்றுவளைப்பை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நுளம்பு குடம்பிகள் கிடந்தமை
கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை விக்னேஷ்வரா மஹா வித்தியாலயம் மற்றும் அன்புவழிபுரம் கலைமகள் மஹா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் டெங்கு பரவும் விதத்தில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டதாகவும் அப்பாடசாலை அதிபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அதிகளவில் அரச திணைக்களங்களில் டெங்கு பரவும் இடங்கள் காணப்படுவதாகவும் எச்சரிக்கை கடிதங்களை திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.


Comments
Post a Comment