இறக்காமம் காணி அபகரிப்பை கண்டித்து அம்பாறை முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவித்து இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் முழுதும் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் பிரதேச அமைப்புகள் இதற்கான அழைப்பை விடுத்துள்ளன.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பில்,
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புக்கு எதிராக சிறுபான்மை சமூகங்கள் இணைந்து ஹர்த்தால் மற்றும் பாரிய கண்டன பேரணியொன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த மக்கள் வாழாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எமது பூர்வீக காணியில் சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. நாம் பேச்சுவார்த்தையூடாக இதனை தீர்த்துக்கொள்ள முயற்சித்தோம்.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் பெரும் பான்மை சமூகத்தினரிடம் எமது நியாயங்களை எடுத்துக் கூறிய போதும் அது பயனளிக்கவில்லை.
இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையில் விகாரை அமைப்பதற்கு எதிராக பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஜனநாயக ரீதியிலான பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டும் அவை கண்டுகொள்ளப்படவில்லை.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை காட்ட இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். இதனூடாக சிறுபான்மை மக்களின் இலக்கை அடையலாம்.
எமது ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளை அரசாங்கமும் பேரினவாதிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அந்த அடிப்படையில் இன்று வெள்ளிக் கிழமை அம்பாறை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொள்வதோடு ஜும்ஆ தொழுகையின் பின்பு சகல பள்ளிவாசல்களிலும் கண்டன பேரணியொன்றையும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல மக்களும் கலந்து கொண்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் இப் போராட்டத்தை நடாத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.

Comments
Post a Comment