கொழும்பு யாசகர்களுக்கு அம்பலங்கொடயில் காப்பகம்
கொழும்பு நகரிலிருந்து யாசகர்களை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்த நிலையில், தற்போது அம்பலங்கொடயில் இதற்கென ஒரு நிலையம் கட்டியெழுப்பப் பட்டுள்ளதாகவும் இவ்வருடம் ஜுன் மாதமளவில் அனைத்து யாசகர்களும் அங்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் ரூபா செலவில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கொழும்பில் சுமார் 3000 பேர் யாசகத்தில் ஈடுபடுகின்றதாகவும் அதில் 600 பேரே உண்மையான யாசகர்கள் எனவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment