பட்டதாரிகளுக்கு ஒரு தீர்வு!
அண்மைக்காலமாக பட்டதாரிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளது.
பட்டதாரிகள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளை மாவட்டச் செயலகங்களில் தெரியப்படுத்தி பல விபரங்களை தெரிவித்துள்ளோம்.
மேலும் ஜனாதிபதியின் சம்மதத்தின் பேரில் பல்வேறு கோரிக்கைகளை தெரியப்படுத்தியுள்ளதாகவும் சில விடயங்களை, நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment