(வீடியோ).,ஓட்டமாவடி சிறாஜியா அரபு கல்லூரிக்கு சாட்டோ மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க நாபீர் பெளண்டேசன் விஜயம்..




(ihzana fareed)

கல்குடா பிரதேசத்தில் மூன்று தசாப்தகாலமாக இயங்கி வருகின்ற ஓட்டமாவடி சிறாஜியா அரபு கல்லூரிக்கு சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் கடந்த வாரம் சாட்டோ மன்சூரின் வேண்டுகோளுக்கமைய விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கல்குடா பிரதேசத்தில் உலமாக்களுக்கு தட்டுப்பாடாக இருந்த கால கட்டத்தில் சொந்த மண்ணில் பல உலமாக்களை உருவாக்கிய பெருமையினை பிரதேசத்தில் உள்ள ஏனைய அரபு கலாசாலைகளுடன் ஒப்பிடுகின்ற பொழுது ஓட்டமாவடி சிறாஜியா அரபு கல்லூரியானது

தன்னகத்தே வைத்திருக்கும் அரபு கல்லூரியாகும்.
ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்திருக்கும் குறித்த அரபு கல்லூரியில் மாணவர்களின் தொடர்ந் தேர்ச்சியான அதிகரிப்பு, இடப் பற்றாக்குறை, சுற்று சூழல் மற்றும் சுகாதார பிரச்சனைகள், விளையாட்டு மைதானம் இன்மை போன்ற அடிப்படை காரணங்களால் தனது இருப்பிடத்தினை ஓட்டாமாவடி பாலத்திற்கு அப்பால் உள்ள நாவலடி பிரதேசத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாய தேவையில் இருந்து வருகின்றது. மெற்குறித்த பிரச்சனைகள் குறித்த அரபு கல்லூரி சமகாலத்தில் எதிர் நோக்குகின்ற பாரிய சவாலாகவும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகவும் பார்க்கப்படுகின்றது.

முற்றிலும் கல்குடா ஜமாத்தே இஸ்லாமி சகோதரர்களால் வழி நடாத்தப்படுகின்ற குறித்த சிறாஜிய அரபு கல்லூரிக்கு தற்பொழுது முதற்கட்டமாக தேவையாக உள்ள விடயங்களை கல்லூரியின் நிருவாகத்தினர் நாபீர் பெளண்டேசனிடம் முன்வைத்த பொழுது அடுத்தமாதம், அதாவது வருகின்ற ரமழான் மாதத்திற்கு முன்பாக முக்கிய தேவைகளில் ஒன்றை செய்து தருவதாகவும், வெளிநாட்டு தனவந்தர்களுடன் கலந்துரையாடி இன்னும் பல உதவிகளை பெறுவதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.

மேலும் பிரதேசத்தில் சமூக ஆர்வலராகவும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ மன்சூரினால் புதிய கட்டடத்திற்காக 50 சீமந்து பக்கற்றுக்கள் உடனடியாக அன்பளிப்பு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கல்லூரியின் அதிபர் தாஹிர் மெளலவி, முன்னாள் கல்குடா உலமா சபை தலைவரும், நிருவாக உதியோகத்தருமான ஏ.பி.எம்.முஸ்தபா மெளலவி, ஆசிரியர் சித்தீக் பிரதர், ஓட்டமாவடி உபதபாலக அதிபர் அஸ்ரஃப் மெளலவி மற்றும் கல்லூரியின் வளர்ச்சியுடன் தொடர்பு பட்ட முக்கிய உலமாக்கள், புத்தி ஜீவிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யட்டுள்ளது


.

Comments