நடு வீதியில் இளைஞனைத் தாக்கிய பொலிசார் பணி நிறுத்தம்!
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன், தமது கட்டளையை மதிக்கத்தவறியதாகக் கூறி, சராமரியாகத் தாக்கிய இரு போக்குவரத்து பொலிசார் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் ஊழியர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை குறித்த இளைஞன் தாக்கப்பட்ட சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment