மரண தண்டனை குற்றவாளி துமிந்த, நீதிமன்றம் வந்தபேது.!
(எம்.எப்.எம்.பஸீர்)
நாடாளுமன்ற உறுபினராகவிருந்த போது மூன்று வருடங்களுக்கான சொத்துகள், பொறுப்புகள் விபரத்தை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டுக்குள்ளான முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாரத லக்க்ஷமன் கொலை விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியுமான ஆர்.துமிந்த சில்வா ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு 3,000 ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் ஆர். துமிந்த சில்வா தனது சொத்துக்கள் குறித்த வெளிப்படுத்தவில்லை என கூறி இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் மூன்று வழக்குகளை தாக்கல் செய்தது.
இது தொடர்பான வழக்கு நேற்று மீள விசாரணைக்கு வந்த போது, துமிந்த சில்வா அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து சக்கர நாற்காலியிலேயே நீதிமன்றினுள் அழைத்து செல்லப்ப்ட்டார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைகளின் போது துமிந்த சில்வா சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மேலதிக நீதிவான் அருணி ஆட்டிகலவிடம், தனது சேவை பெறுநர் சொத்து விபரங்களை வெளிப்படுத்தாமையை ஏற்றுக் கொண்டதுடன் அவருக்கு ஏற்பட்ட உடல் ஆரோக்கியமற்ற நிலைமையே அதற்கான காரணம் என சுட்டிக்காட்டினார்.
தமது தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்ட அவர் வேண்டுமென்றே சொத்துக்களை வெளிப்படுத்தாமல் இருக்கவில்லை எனவும் இக்காலப்பகுதியில் வருமான வரி திணைக்களத்துக்கு அனைத்து விபரங்களையும் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து விடயத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் அருணி ஆட்டிகல, சட்ட விரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பில் இவ்வழக்கில் எவ்வித விசாரணையும் செய்யப்படாத நிலையில் வெளிப்படுத்தாமையை மட்டும் கருத்தில் கொண்டு தண்டனை அறிவிப்பதாக கூரினார்.
அத்துடன் சட்ட விரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் விசாரணை செய்யப்படுமானால் அதனை தனியான வழக்காக பதிவு செய்யவும் நீதிவான் ஆலோசனை வழங்கிஒயே தண்டனையை அறிவித்தார்.

Comments
Post a Comment